2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; லொறி சாரதி கைது

Freelancer   / 2023 மார்ச் 02 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை, திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியின் தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேற்றிரவு (01) 9 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து லொறியின் சாரதி கைது செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாணிக்கப் பிள்ளையார் வீதி, விநாயகபுரம் 4ஆம் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய திருச்செல்வம் கிருஷன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் பகுதியில் இருந்து தீரக்கோவிலை நோக்கிப் பயணித்த லொறியும் திருக்கோவில் இருந்து தங்கவேலாயுதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டர்சைக்கிளிலுயே மோதியுள்ளன. 

இதன்போது மேற்படி இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், லொறி சாராதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X