2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தின் 2019 ஆண்டுக்கான பாரம்பரிய கலைத்துறைக்கான பகுதிநேர போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்விண்ணப்பங்கள் உயர்கல்வி, கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திருக்கோவில் கலாசார மத்திய திறன் அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக பகுதிநேர போதனாசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள்,  திருக்கோவில் பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட அரசதுறை அல்லது துறைசார்ந்த பாரம்பரிய கலைஞர்கள், பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தவர்கள் பின்வரும் துறைகளுக்கான போதனாசிரியர்களாக விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலம், சிங்களம், கைவினைத்திறன், நாடகமும் அரங்கியலும், சித்திரக்கலை, கிராமிய நாடகம், சாஸ்திரிய நடனம், மிருதங்க இசை, கர்நாடக சங்கீதம் போன்ற துறைகளில் தேர்ச்சியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15திகதிக்கு முன்னர் பொறுப்பதிகாரி, திருக்கோவில் கலாசார மத்திய நிலையம், திருக்கோவில் என்ற முகவரிக்கு தபால் மூலமோ, நேரடியாகவே அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பதாரிகள், விண்ணப்பங்களை திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமான கே.ரவீந்திரன் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .