2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரட்சி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில், வரட்சி நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் மு்னனெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கெ இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில், பிரதேச செயலாளர் கே.லவநாதனின் பணிப்புரைக்கமைய,  (06) நேற்று முதல் நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு குடும்பத்துக்கு, 5000  ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை​ச் சேர்ந்த 2,925 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .