Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 08 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் அ 28.05.2022 முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணினி விஞ்ஞான (Computer Science) பிரிவுக்கு கணினி விஞ்ஞான பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, 18.12.2020 முதல் செயற்படும் விதத்தில் கணினி விஞ்ஞான துறையில் பேராசிரியராக பல்கலைக் கழக பேரவையின் 258 ஆவது அமர்வில் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணினி விஞ்ஞான துறையில் முதலாவது பேராசிரியர் என்ற வரலாற்று இடத்தை தனதாக்கிக்கொண்ட கலாநிதி நளீர் அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1996 முதல் 1998 வரை உதவி விரிவுரையாளராக இணைந்து கொண்ட கலாநிதி நளீர், பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 1998 ஆம் ஆண்டு விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார். இதேவேளை கணினி விஞ்ஞான துறைக்கு 2015-2017 வரை இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
தற்போது கணினி விஞ்ஞான துறையின் திணைக்களத் தலைவராக பணியாற்றும் கலாநிதி நளீர் அவர்கள், பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாகம் சார்ந்த பிரிவுகளிலும் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹும்களான முன்னாள் அதிபர் அல் ஹாஜ் சுலைமாலெப்பை ஹச்சு முகம்மட் மற்றும் முன்னாள் ஆசிரியை ஹஜியாணி சின்னலெப்பை மீரா உம்மா ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில், ஐந்தாவதாகப் பிறந்த கலாநிதி நளீர் அவர்கள், தனது பாடசாலைக் கல்வியை ஆரம்பம் முதல் இறுதிவரை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கற்றிருந்தார்.
பல்கலைக்கழகக் கல்வியை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இணைந்து 1996 இல் தனது (B.Sc.(Hons) பட்டத்தைப் பெற்றார்.
பின்னர் 2000 ஆம் ஆண்டில் PGIS இல் இணைந்து M.Sc. in Applied Statistic ஐயும், 2009 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இணைந்து MPhil in Computer Science பட்டத்தையும், 2013 ஆம் ஆண்டு சீனாவின் Beijing Institute of Technology இல் இணைந்து தனது Ph.D. பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஐம்பதுக்கு மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள கலாநிதி எச்.எம்.எம்.நளீர் அவர்கள்இ 2011இ2012 ஆண்டுகளில் கணணி விஞ்ஞான துறையில், சீனாவின் தலைநகர் Beijing இல் சர்வதேச விருதுகளையும் பெற்றிருந்தார்.
மீராசாய்வு மாஜிதா பேகத்தை மணந்து, நான்கு பிள்ளைகளின் தந்தையாகவுள்ள கலாநிதி நளீர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி செயற்படும் சிறந்த சமூகசேவகருமாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
5 hours ago
8 hours ago
22 Dec 2024