2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

முன்பிள்ளை பருவ பாடசாலை ஆசிரியர்கள் கௌரவிப்பு

Editorial   / 2018 மார்ச் 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட  முன்பிள்ளை பருவ பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்றது.

பிரதேச செயலகத்தின் முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர் ஜ.உஜேந்தன் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரும் எஸ்ரிஏ சொலிட்டாரிட்டி புவுண்டேசனின் திட்ட ஆலோசகருமான இரஸ்ட் வெப்பர் மற்றும் ரெபேக்கா வெப்பர் ஆகியோருடன் எஸ்ரிஏ அமைப்பின் திட்ட இணைப்பாளர் வி.வாமதேவன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறந்த இளம் கல்வி சமுதாயத்தை உருவாக்க அரும்பாடுபட்டு சேவை ஆற்றிவரும் பிரதேசத்தின் 26 முன்பிள்ளை பருவ பாடசாலைகளை சேர்ந்த 55 ஆசிரியர்களுக்கு அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

விசேடமாக பிரதேச செயலாளர் மற்றும் எஸ்ரிஏ அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஆகியோர் முன்பிள்ளை பருவ உத்தியோகத்தரினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X