2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முன்னெச்சரிக்கை கோபுரங்களில் அனர்த்த ஒத்திகை

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

நாட்டில் கடற்கரையை அண்டிய 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில், எதிர்வரும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம நேரத்தில் அனர்த்த எச்சரிக்கை ஒலியெழுப்பி அனர்த்த பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை ஒன்றினை நடாத்தவுள்ளதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஷியாத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நேற்று (27) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“14 கரையோர மாவட்டங்களில் 77 அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஹம்பாந்தோட்டையில் 09 கோபுரங்களும், அம்பாறையில் 08 கோபுரங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 07 கோபுரங்களும் உள்ளடங்களாக 14 மாவட்டங்களில் 77 அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“இதுவரை காலமும் இடம்பெற்ற அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகையானது மாவட்டம் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தை மையப்படுத்தியதாக இடம்பெற்று வந்துள்ளது. எதிர்வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒத்திகையானது, கரையோர 14 மாவட்டகளிலும் 77 அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களை ஒரே நேரத்தில் இயங்கச் செய்து அதன் மூலம் அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்தினையை மேற்கொண்டு பொதுமக்களை விழிப்பூட்டுவதற்கான வேலைத் திட்டம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

“இந்த ஒத்திகை குழுவில் மாவட்ட கட்டளை அதிகாரியாக மாவட்ட செயலாளரும், பிரதேச கட்டளை அதிகாரியாக பிரதேச யெலாளர்களும் காணப்படுவதுடன், இவர்களின் கீழ் ஏனைய பிரிவுகளுக்கான அதிகாரிகளும் நியமிக்கப்படுடவுள்ளனர். இக்குழுவின் ஊடாக இந்த அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகையை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .