Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 மே 13 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்குப் பிரதேசத்திலுள்ள மீன்பிடிச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை, முடிந்தவரையில் திட்டமிட்டுச் செயற்படுத்துவோமென, மீன்பிடி நீரியல்வள கிராமியப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமியப் பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வு, பொத்தானை - கழுவாமடுவில், நேற்று (12) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலுள்ள மீனவர்களது பிரச்சினை, கூடிய விரைவில் தீர்க்கப்படுமென்றுத் தெரிவித்த அவர், அவசரமாகச் செய்யவேண்டிய விடயங்கள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
கல்குடா பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒரு பட்டதாரி உருவாக்கப்பட வேண்டுமென்பதே, தன்னுடைய கனவு என்றும் அதை, பெற்றோரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
“கல்குடா பிரதேசத்திலுள்ள பேஸ்புக் பாவனையாளர்கள் சிலர், மோசமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு, மற்றவர்களை விமர்சனம் செய்கின்றார்கள். யாரைப் பற்றியும் எழுதுங்கள், அது ஜனநாயக உரிமை. ஆனால், வார்த்தைப் பிரயோகங்களை அழகாகவும் கன்னியமாகவும் பயன்படுத்த வேண்டும்” என்று, அவர் அறிவுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago