2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரத்தில் ஓடுகின்ற சைக்கிள் பாவனை அதிகரிப்பு

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நாடளாவிய ரீதியில்  எரிபொருள் பிரச்சினை இன்றைய சூழலில் காணப்படுவதனால் பொதுமக்கள் மாற்று யுக்தியுடைய பல உபகரணங்களை அன்றாட செயற்பாடுகளுக்கு  பயன்படுத்தி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு  மின்சேமிப்பு சைக்கிளை  தற்போது பொதுமக்கள் பரவலாக பாவிப்பதை அவதானிக்க முடிகின்றது.

சுமார் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் குறித்த சைக்கிள், இலங்கை நாணய மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக பாவனையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 8 மணித்தியாலங்கள் மின்சாரத்தின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் இந்த சைக்கிள் மின்சார மின்கலத்தின் சக்தியுடன் விரைவாக பயணத்தை ஆரம்பிக்கின்றது.

எரிபொருள் இல்லாமல் இலகுவாக ஒரு மனிதன் இந்த சைக்கிளை பயன்படுத்தி தத்தமது வேலைகளை விரைவாக பூர்த்தி செய்கின்றதுடன்  இரவில் பயணம் செய்வதற்குரிய  சக்தி வாய்ந்த மின்குழிழ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வீதியில் பயணிக்கின்ற போது  எதிரே வருகின்ற வாகனங்களுக்கு சமிஞ்சை வழங்கக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

ஒரே தடவையில் சுமார் 100 கிலோமீற்றர் தூரத்திற்கு சென்று இலக்கினை அடைந்து  திரும்ப முடிகின்றதுடன், இதில் அமர்ந்து செல்ல பிரத்தியேக தயாரிப்பு ஆசனம் பொருத்துவதற்குரிய ஏற்பாடும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் இல்லாத இக்கால பகுதியில் பொதுமக்கள் இவ்வாறான  சைக்கிள் வண்டிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X