2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘மாவீரர் துயிலும் நினைவேந்தலில் கட்சிகளுக்கு இடமில்லை’

எஸ்.கார்த்திகேசு   / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில், கஞ்சிகுடிச்சாற்றில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில், அரசியல் கட்சிகளுக்கு இடமளிக்கப் போவதில்லையென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

2006ஆண்டுக்கு பின்னர், முதன்முறை நினைவேந்தல்களை அனுஷ்டிக்கப்படவுள்ள கஞ்சிகுடிச்சாறு நினைவேந்தல் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,  

“இம்முறை பல சவால்களுக்கு மத்தியில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை, அம்பாறையில் யுத்தநிறைவின் பின் முதன்முதலாக எற்பாடு செய்து வருகின்றோம்.

“இவ்நிகழ்வில் யாரும் கலந்து கொள்ள முடியும். ஆனால், அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் யாரும் கலந்துகொள்ள முடியாது.

“கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.

“அந்தவகையில், இம்முறை மாவீரர்களின் குடும்ப உறவுகளால், எதிர்வரும் 27ஆம் திகதி மாலை கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில விதைக்கப்பட்டுள்ள சுமார் 700 மாவீரர்களின் ஆத்மசாந்தி வேண்டி, தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .