2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 09 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனை பிரதேச நகரசபையை பிரிப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் கல்முனைவாழ் தமிழ் மக்களுக்கிடையிலான  கலந்துரையாடல், மாவட்ட செயலகத்தில் நேற்று (08) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உள்ளிட்ட கல்முனைவாழ் புத்தி ஜீவிகளும், மாவட்ட செயலகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் துசித்த பி வணிகசிங்க தலைமையிலான மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், எல்லை நிர்ணய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புதிதாக உள் ளூ ராட்சி மன்றங்களை உருவாக்குதல், தரம் உயர்த்தல் தொடர்பான திட்ட முன்மொழிவுகளை முன் வைக்கமாறு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கல்முனையில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பல திட்டங்களை முன் மொழிந்து வரும் நிலையிலேயே, இக்கலந்துரையாடல் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .