Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா
பல்கலைக்கழத்தில் தரமான கல்வியை நிலைநாட்டி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று (14) விழிப்புணர்வு பேரணியொன்றை நடத்தினர்.
பல்கலைக்கழக மாணவர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு பேரணியில் பெருந்திரளான மாணவர்கள் அரபு, இஸ்லாமிய பீடத்திலிருந்து பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷமிட்டவாறு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தொகுதி வரை சென்றனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, பல்கலைக்கழத்தின் நிர்வாகத்தினரிடம் கையளித்து வைத்தனர்.
மாணவிகளுக்கு எதிரான வன்முறைகள், அச்சுறுத்தல்களுக்கு நிர்வாகம் மௌனம் காக்காது, உடனடி நடவடிக்கையை விரைவாக நிறைவேற்றுமாறும், முறையற்ற வித்தில் செயற்படும் அதிகாரிகளை கண்டிக்குமாறும், தமது கோரிக்கையை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, விடுதியின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துமாறும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளைச் சுரண்டாது சீராகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பேரணியில் ஈடுபட்ட மாணவர்களால் வலிறுத்தப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago