Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனைப் பிராந்தியத்தில் மலேரியாவைப் பரப்பும் நுளம்புக்காவிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்தியப் பொறுப்பதிகாரி டொக்டர்எம்.எம். நௌஷாத் தெரிவித்தார்.
நுளம்புக் காவிகளைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள தேசிய மலேரியாத் தடுப்பு இயக்கத்தைச் சேர்ந்த நிபுணர் குழு, கல்முனை பிராந்தியத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.
இதனையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமமையில், அக்கரைப்பற்று மாநகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்காக விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
கப்பி மீன் வளர்க்கப்படும் தொட்டிகள், கிணறுகளில் காணப்படும் தொற்று நிலைமை, கிணறுகளில் மீன் வளர்த்தல், கைவிடப்பட்ட கிணறுகளை நிரந்தரமாக மூடிவிடுதல் மற்றும் பாவிக்கும் கிணறுகளை தற்காலிகமாக வலைகளால் மூடுதல் ஆகிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மலேரியா தொற்றும் நாடுகளுக்குச் செல்வோரை அடையாளம் காணுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாக டொக்டர் நௌஷாத் தெரிவித்தார்.
வெளிநாடு செல்ல முன்னர் மலேரியாத் தடுப்பு இயக்கத்தைத் தொடர்புகொண்டு மாத்திரைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளுமாறும் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் காய்ச்சல் வந்தால் அருகிலுள்ள வைத்தியசாலையில் இலவசமாக மலேரியாவுக்கான பரிசோதனையைச் செய்துகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
6 hours ago
9 hours ago