2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்

Freelancer   / 2022 ஜூலை 12 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் இன்று (12) தெரிவித்தார்.

உத்தியோகத்தர்களின் வரவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கான அத்தியாவசிய அவசரத் தேவைகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் சேவைகள், மோட்டார் வாகன ஆணையாளர், பதிவாளர் திணைக்களம் போன்றவற்றின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட சேவைகளை பெறுவதற்கான தூர இடங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதியும் அவர்களுக்குரிய சேவைகளை அசௌகரியம் இன்றி பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு ஏனைய சேவைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X