2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மதுபானசாலைக்கு முன்னால் கொடூரம்; குடும்பஸ்தர் பலி

எஸ்.கார்த்திகேசு   / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை மதுபானசாலைக்கு முன்பாக நேற்றிரவு (07) 11.30 மணியளவில் சொகுசுக் காரொன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பலியானவர், திருக்கோவில் 02 நாடிலடி வீதியில் வசிக்கும் பத்மநாதன் விக்னேஸ்வரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர், தம்பட்டை கடற்கரை பகுதியில் இருந்து மதுபானசாலை பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி வேகமாக வந்த கார், குடும்பஸ்தரை மோதித் தள்ளியதில், ஸ்தலத்திலேயே அவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து, கார் சாரதி தப்பியோடியுள்ளாரென ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரைக் கைப்பற்றியுள்ள திருக்கோவில் பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .