2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மகள் வீட்டுக்குச் சென்ற தாய் பலியான சோகம்

Freelancer   / 2023 மார்ச் 04 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாறுக் ஷிஹான்

அம்பாறை - காரைதீவு, சண்முக வித்தியாலயத்திற்கு முன் முச்சக்கர வண்டியும் உழவு இயந்திரமும் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்த  நிலையில்  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு -  ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த  மீராமுகைதீன்  பாத்தும்மா (வயது - 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் உள்ள  மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இவ்வவிபத்து ஏற்பட்டதில் தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது  அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன்  ஆட்டோ ஒன்று  மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X