2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பொதுமக்களிடம் அபிப்பிராயங்களைப் பெறல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு, இது தொடர்பான கொள்கைகளையும் கருத்துகளையும் முன்மொழியுகளையும் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக, அம்பாறை நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்துதல், சம்மாந்தறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதல், சாய்ந்தமருது புதிய பிரதேச சபையை உருவாக்குதல் தொடர்பாக கருத்துகள் பொதுமக்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிய சபைகளை உருவாக்குதல் தொடர்பாகவும் புதிய கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது ஏனைய கருத்துகளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலாளர், அல்லது தலைவர் உள்ளூராட்சி நிறுவனங்களை கூட்டிணைப்பதற்கான மாவட்ட குழு, மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம், அம்பாறை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 063-2222206, 063-2222233 ஆகிய தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது 063-2222236, 063-2222130 எனும் தொலைநகல் இலக்கத்துக்கோ கோரிக்கைகளை வழக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .