2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பூர்விக நிலங்கள் கபளிகரம் செய்வதை அனுமதிக்க முடியாது

நடராஜன் ஹரன்   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய இனத்தின், அடையாளங்களை சிதைத்து பூர்விக வாழ்விட நிலங்களை கபளிகரம் செய்யும் எந்தவொரு செயற்பாடுகளும் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. இதனை நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் இதய சுத்தியோடும் போராடுவதற்கு எமது சமூகம் தயாராகவேவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் தெரிவித்தார். 

ஆலையடிவேம்பில் புதிய வாராந்த சந்தை திறப்புவிழா நேற்று (05) இடம் பெற்றபோது, நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகால யுத்தம் தமிழர்களது கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்தைத்தும் சிதைந்து சின்னாபின்னமாக்கியது, இழந்தவற்றை நாம் திரும்ப மிகவிரைவாக  பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், இம்மண்ணில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தனது இனத்தின் விடியலுக்காக இதய பூர்வமாக உழைக்க வேண்டும் 

ஒர் இனம் வளர வேண்டுமாக இருந்தால், கல்வியும்   பொருளாதாரமும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

தற்போது, எமது சமூகத்தின் கல்வி, கலாசாரம் சீரழிவு மறைமுகமான  கரணங்களைக் கொண்டு சிதைக்கப்படுவதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நமது  சமூகத்தின் விடியலுக்கான கால்கோள் ஆரம்பிக்கப்படுள்ளது என கூறுகின்றேன் என்றார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .