எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலையற்ற பட்டதாரிகளுக்கு, போட்டிப் பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில், மூன்றாம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை கிழக்கு மாகாணசபை வழங்க வேண்டுமெனவும், தீர்வு கிடைக்கும்வரை, காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தன்னானந்த தேரர், இன்று (09) தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் போன்று, கிழக்கிலும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
"இறுதியாக நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில், 40 புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்ற, வடக்கு மாகாண பட்டதாரிகள் சிலருக்கு, மூன்றாம் கட்டமாக, தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில், நியமனம் அண்மைக்காலமாக வழங்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
"எனவே, இதனை போன்று கிழக்கு மாகாணத்திலும், ஆளுநர் ரோஹித பொகொல்லாகம, இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்" என்று, அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் சுனாமி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று வேலையற்றுள்ள வடக்கு, கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் மாகாண சபையின் ஊடாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
எனினும், இந்த விடயத்தை கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
"எனவே, 40 புள்ளிகளைப் பெற்ற வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும், குறித்த நியமனங்களை வழங்குதல் வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், நாங்கள் சாத்வீகமான போராட்டம் ஊடாகத் தான், எமக்கான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025