Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக புத்திஜீவிகள், புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எவ்வித ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லையென, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் எம்.எச்.எம். அஸ்ரப் தின நினைவுச் சொற்பொலிவு, ஒலுவில் வளாகத்தில் பல்கலைக்கழக மொழித்தறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.
இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உபவேந்தர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“பல்கலைக்கழகத்தில் நாங்கள் பட்டதாரிகளையும் பேராசிரியர்களையும், சிறந்த கல்விமான்களையும் வெளியேற்றி வருகின்ற வேளையில், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் புதிய அரசியல் யாப்பு தொடர்பான எவ்விதமான முன்னெடுப்புகளையும் முன்னெடுக்கவில்லை.
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம், சாதிக்க வேண்டிய விடங்கள் ஏராளம் இருக்கின்றன. நன்கு திட்டமிட்டு எதைச் சாதிக்க வேண்டுமென்ற கொள்கையுடன் செயற்பட்டவர் அஷ்ரப்.
இலங்கையில் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மூவின சமூகங்களும் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம், இன்று அவரது கனவை நனவாக்கியுள்ளதோடு, நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கி வருகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
29 Apr 2025
29 Apr 2025