Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2022 ஜனவரி 27 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே டொக்டர் ரஜாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரஜாப் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில், நேற்று (26) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டொக்டர் ரஜாப், பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளில் வைத்திய அத்தியட்சகராகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago