2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

புதிய சிஸ்டத்தை அமுல்படுத்தவும்

Princiya Dixci   / 2022 ஜூலை 25 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

பொதுமக்களுக்கு பெட்ரோல் வழங்கும் போது, ஏனையவர்கள் உள்வாங்கப்படுவதைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலையடிவேம்பு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆலையடிவேம்பு பலநோக்குக் கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் தீர்ந்தமையால் கவலையுடன் கலைந்து சென்ற பொதுமக்கள், இருமுறை பெட்ரோல் பெறமுடியாத வகையில், ஏதாவது ஒரு சிஸ்டத்தை அமுல்படுத்தவில்லை எனில் தொடர்ந்தும் தாங்கள் பாதிக்கப்படுவோம் எனவும் தெரிவித்தனர்.

வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில், ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இரவு  பெட்ரோல் வழங்கப்பட்டது.

அக்கரைப்பற்று பொலிஸாரின் மேற்பார்வையோடு  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. அத்துடன், பெண்களுக்கு என ஒரு வரிசையிலும் பொலிஸாருக்கு என ஒரு வரிசையிலும் பெட்ரோல் வழங்கப்பட்டது.

0 1 2 வாகன இறுதி இலக்கத்தையுடைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அவர்களது அதிகராத்தை  தாண்டி,வேறு சில இலக்க வாகனங்களுக்கும் பெட்ரோல் வழங்கப்பட்டதை காண முடிந்தது.

குறித்த எரிபொருள் நிலையத்துக்கு ஒரு மாதகாலத்துக்கு மேலாக பெட்ரோல் வழங்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட 6,600 லீற்றரும் விநியோகப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் இரு நாட்கள் காத்திருந்த பொதுமக்கள் பெட்ரோல் கிடைக்கப்பெறாது வேதனையுடன் திரும்பிச் சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X