Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து, உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராகப் புதிதாக பதவியேற்ற சிறியானி விஜயவிக்ரமவுக்கு, அம்பாறை நகரில் நேற்று (19) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்ரம,
“எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளைச் செய்ய முடியாது. ஆளுங்கட்சியின் ஊடாகத்தான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
“அந்த வகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாம் எல்லோரும் பலப்படுத்தி எமக்கான அபிவிருத்திகளை பெற்றக்கொள்ள வேண்டும்.
“அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்கள் நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகின்றது. அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
“மிக விரைவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டில் ஆட்சி அமைக்கும். இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரத்தைப் பலப்படுத்துவதன் ஊடாக, எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago