Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 ஜூன் 28 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதிய தலைமுறைகளுக்கு, கூட்டுறவுச் சங்கங்களுக்குள் முறையான இடம் வழங்கப்படாமையின் காரணமாக, கூட்டுறவுக்குள் புதிய திட்டங்கள் முன்னெடுக்க முடியாத பயங்கரமான சூழ்நிலைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன” என, வலயக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் எம்.சி.ஜலால்தீன் தெரிவித்தார்.
“இலங்கையில் கூட்டுறவுச் சங்கத்துக்குள் 1971 – 1982 காலப் பகுதியில் இணைந்து கொண்டவர்கள்தான் இன்றும் சங்கங்களை நடத்திக் கொண்டு செயற்படுத்தபவர்களாக இருக்கின்றார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
96ஆவது சர்வதேச கூடடுறவு தின நிகழ்வு, திருக்கோவில் பிரதேச கூட்டுறவு சங்கக் கட்டடத்தில், சங்கத்தின் தலைவர் சின்னத்துறை விஜயகுமார் தலைமையில், நேற்று (27) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கிழக்கு மாகாணத்தில் கல்முனை வலயத்தில் திருக்கோவில் பிரதேச கூட்டுறவுச் சங்கம் தற்போது இலாபம் ஈட்டும் சங்கமாகச் செயற்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தக்கவைத்தக் கொள்ள வேண்டிய பொறுப்பு இச்சங்கம் சார்ந்த அனைவரினதும் கடமையாகும்.
“வடக்கு, கிழக்கைப் பொருத்தமட்டில், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியில் பின்நோக்கிக் காணப்படுகின்றோம்.
“இந்நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் இலாபத்தை ஈட்ட வேண்டும். இதற்கு சக்திமிக்க இளைஞர்களின் பங்களிப்பும் இக்கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையாக அமைந்துள்ளது.
“கூட்டுறவுச் சங்கத்தின் நன்மைகளை, மீண்டும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களை விழிப்பூட்டும் வகையில், மட்டக்களப்பு வௌர் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி, மாபெரும் விழாவொன்றை நாங்கள் ஏற்பாடு செய்யவுள்ளோம்.
“இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, அமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
“சுமார் 10 ஆயிரம் அங்கத்தவர்களை இந்நிகழ்வில் இணைத்துக் கொள்ளுமாறு, ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago