2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச வைத்திய காரியாலயத்திலிருந்து டெங்கொழிப்புப் பிரிவை பிரிக்க முயற்சிகள்

வி.சுகிர்தகுமார்   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய காரியாலயத்தின் பூச்சாய்வாளர் பிரிவை (டெங்கொழிப்புப் பிரிவு), பிறிதொரு பி​ரதேச சுகாதார வைத்திய காரியாலயத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் சுகாதாரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த பல வருடங்களாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய காரியாலயத்தின் கீழ் தனியொரு பிரிவாக இயங்கி வந்த இப்பிரிவையும் இப்பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களையும் வேறு பிரதேசம் ஒன்றுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கான இடமாற்ற கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்விடயம் தொடர்பில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், அவர் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கடந்த பலவருடங்களாக ஆலையடிவேம்பில் இயங்கி வந்த இப்பிரிவை மாற்றுவதற்கு காரணம் என்ன என்பதைத் தெளிவு படுத்துமாறும் அவ்வாறு மாற்றுவதற்குரிய  தேவையில்லையெனவும் மாகாணப் பணிப்பாளரிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தகுந்த காரணங்களின்றி, குறித்த பிரிவை மாற்ற எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமெனவும்கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X