Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2018 மே 26 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில், யுவதியொருவரிடம் பாலியல் சேஷ்டை செய்த நபரை மடக்கிப்பிடித்து தாக்கிய பிரதேச மக்கள், குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
இச்சம்பவம், நேற்று (25) நண்பகல், ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை வீதியின் தர்மசங்கரி மைதானத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதனால், நேற்று, குறித்த பகுதியில், பதற்றமான சூழ்நிலை நிலவியது.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த யுவதியிடம், தவறாக நடந்துகொள்வதற்கு முயன்ற நபரே, இவ்வாறு, பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களால் தாக்கப்பட்ட பின்னர், மின்சாரக் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை மே்றகொண்டதோடு, கட்டிவைக்கப்பட்ட இளைஞனையும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர்.
எனினும், இளைஞனின் மோட்டார் சைக்கிளை, பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தினர். குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள், வடமாகாணத்துக்குரியது என்பது, வாகன இலக்க தகட்டை வைத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இளைஞன் அக்கரைப்பற்று பொலிஸாரால், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
6 hours ago