Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 11, சனிக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 06:13 - 0 - 75
பாறுக் ஷிஹான்
அம்பாறை - கல்முனை, கடற்கரைப்பள்ளி வீதியில் போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த டிபெண்டர் வாகனம் நேற்று (18) இரவு கைவிடப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு பாரம் தூக்கி ஒன்றின் உதவியுடன் எடுத்து செல்லப்பட்ட நிலையில், தப்பிச்சென்றவர்களில் இரு சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைதீவு பிரதேசத்தில் இருந்து கல்முனை நோக்கி டிபெண்டர் வாகனம் அதி வேகமாக பயணித்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் வீதி பாதுகாப்பு கடமையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் போக்குவரத்து பொலிசார் நின்றுள்ளனர்.
அவர்கள் மிக வேகமாக அவ்வழியாக வந்த டிபெண்டர் வாகனத்தின் போக்கினை அவதானித்து நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
எனினும் போக்குவரத்து பொலிசாரின் வாகனத்தினை வேகமாக வந்த டிபெண்டர் வாகனம் மோதிவிட்டு தொடர்ந்தும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியின் ஊடாக அதி வேகமாக சென்றுள்ளது.
டிபெண்டர் வாகனத்தை பின்தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியில் வைத்து இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் டிபெண்டர் வாகனத்தை மீட்டனர்.எனினும் குறித்த வாகனத்தில் வந்தவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தனர்.
இவ்வாறு டிபெண்டர் வாகனத்தில் இருந்து தப்பி சென்றவர்களில் இருர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் அண்மையில் வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்திருந்தமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கைதான இரு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கல்முனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago