Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.சி. அன்சார்
அம்பாறை மாவட்டத்தின் கொண்டவட்டான் விவசாய மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதுடன், சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுக்க, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதியும் வழங்கியுள்ளது.
திகாமடுல்ல தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியின் காரணமாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் கொண்டவட்டான் பிரதேசத்தில், சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள், 370க்கும் மேற்பட்ட ஏக்கர் வயற் காணிகளில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் சுமார் 75 வருடகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் இப்பிரதேசத்திலுள்ள 170க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானதென அறிவித்துள்ளதோடு, அங்கு நெற்செய்கை செய்ய முடியாதவாறு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத்தடைவிதிப்பால், விவசாயிகள் நெற்செய்கை செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனை விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, நேற்று முன்தினம் (29) அவர், கொண்டவட்டான் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து விசேட கூட்டமும் நடைபெற்றது.
இதில், அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் எம். விக்கிரமதிலக, விவசாயிகள், காணி உரிமையாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளுக்குச் சொந்தமான குறித்த இக்காணிகள், வனப் பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, விரைவில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து விடுவித்துத் தருவதாக, விவசாயிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago