Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 15 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிரதேச செயலகங்கள் ரீதியாக நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு வருவதாக, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் சேவைகள் குழு அங்குராப்பண வைபவம் நேற்று (14) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பாவனையாளர்களின் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கும் வகையில் பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஆகக் கூடிய சில்லறை விலை, தொகுதி இலக்கம், உற்பத்தித் திகதி, காலவதியாகும் திகதி என்பவற்றை அவதானித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல்விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை விற்பனை செய்தல் பாரிய குற்றமாகும். இதனை பொது மக்கள் பாவனையாளர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
1 hours ago