Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் உள்ள நீர்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதி மீனவர்களுக்கான ஐஸ்கட்டி தேவைகள் இவ்வாடி ஊடாகவே பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.
எனினும், குறித்த நீர் தாங்கியில் இருந்து தற்போது நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாத நிலையில், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளதுடன், ஐஸ் உற்பத்தி நிலையமும் செயலிழந்து காணப்படுகின்றது.
குறித்த நீர்த்தாங்கியில் காணப்பட்ட பாரிய வெடிப்புகள், அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், கட்டடத்தின் சிறு பகுதிகள் உடைந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
இதனால் அதன் அருகில் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனவே, இந் நீர்த்தாங்கியை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago