எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 14 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில், சர்வோதய புர கொடாவவ குளத்தில் நீராடச் சென்ற 16 வயதுச் சிறுவன் ஒருவன், இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் 19ஆம் பிரிவு பசறிச்சேனையைச் சேர்ந்த கலந்தர் அப்ற்டீன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
சிறுவன், தனது குடும்ப உறவினர்களுடன் சர்வோதய புர கொடாவவ குளத்தில் நீராடுவதற்கு இறங்கிய போது, நீரில் மூழ்கி இறந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மரணம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago