Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 12 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
( காரைதீவு நிருபர் சகா)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வறுமையில் வாழும் மக்களுக்காக, இந்திய தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பில் நிவாரணப்பொதியாக அரிசிப்பொதிகள் மற்றும் பால்மா பொதிகளும் வழங்கும் நிகழ்வு நாடுபூராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில், உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் 2150 நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும் இப்பொதிகள் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள், சமுர்த்தி உத்தியோத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவிச்செயலாளர் க.சதிசேகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கே.பரமானந்தம், பிரதேச செயலக நிர்வாக உதியோத்தர் எஸ்.மோகனராஜா, சமுர்த்தி சமுகச்சூழல் பாதுகாப்பு உத்தியோத்தர் எஸ்.பி.சீலன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டடமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago