2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தலின் ஐந்தாவது தொடர் நிகழ்வு

Freelancer   / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நினைவேந்தலின் 5ஆவது தொடர் நிகழ்வும் அவர்தம் உறவுகளை கௌரவித்தலும் நிகழ்வும், அக்கரைப்பற்று பாவேந்தர் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (26) மாலை நடைபெற்றன.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது நினைவேந்தல் நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த உயிர்நீத்தவர்களின் உருவப்படத்துக்கு உறவுகள் இணைந்து ஈகைச்சுடரேற்றினர்.

தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர்நீத்தவர்களின் உறவுகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயிர் நீத்த அனைத்து உறவுகள் சார்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா உள்ளிட்டவர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக முன்னெடுத்த அர்ப்பணிப்பான நடவடிக்கை மற்றும் அவர்களை நினைவு கூரவேண்டியதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்டார்.

மேலும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்தார்.

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கௌரவிக்கப்பட்டதுடன், உயிர்நீத்தவர்களின் புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X