Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனையில் இயங்கி வருகின்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை மூடிவிட்டு, அதன் பணிகளை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு, கல்முனை அலுவலகம் தொடர்ந்தும் இயங்குமென மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உறுதியளித்துள்ளாரென, அரச தொழில் முயற்சிகள், கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று(09) மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை மூடுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு அவர்கள் பலத்த ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன், கல்முனைப் பிராந்திய மக்களின் நலன்கருதி, அவ்வலுவலகம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியதற்கமைய, அமைச்சர் சம்பிக்க, இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகம், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்முனைப் பிராந்தியக் காரியாலயமாக தொடர்ந்தும் நிரந்தரமாக இயங்குமெனவும், இது தொடர்பான பணிப்புரைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்படுமெனவும், அமைச்சர் இதன்போது உத்தரவாதம் வழங்கினார் என்று, பிரதியமைச்சர் ஹரிஸ் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago