2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தேர்தல்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கடந்த காலத் தேர்தல்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று(07), அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள், பொறுப்புக்கூறல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் விசேட மீளாய்வுக் கலந்துரையாடலின்போது, அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன தலைமை வகித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது, தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் எதிர்கொண்ட பல்வேறு விடயங்கள் இதன்போது தனித்தனியாக வினவப்பட்டதுடன், இவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், குறைபாடுகள், அவதானிப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அனைத்துத் தேரத்தல்களையும், மக்கள் நலனை மையப்படுத்தி பிரச்சினைகளும், குறைப்பாடுகளற்ற தேர்தல்கள் செயற்பாடுகளை, அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து  இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .