Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா
“தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில், வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் தூண்டிச் செயற்பட வேண்டாம்” என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில மக்கள் காங்கிரஸ் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் இளைஞர்களுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டம், சின்னப் பாலமுனை காரியாலயத்தில் எச்.எம்.சிறாஜ் தலைமையில், நேற்றிரவு (27) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்தவோ, சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவோ கூடாது. அவ்வாறான அரசியல் கலாசாரத்தை நாம் ஒரு போதும் ஆதரிக்கப்போவதில்லை.
“நாம் எல்லோரும் தேர்தல் செயற்பாடுகளுக்காக களம் இறங்கியுள்ளோம். ஏனைய கட்சி ஆதரவாளர்களுடனோ அல்லது வேட்பாளர்களுடனோ எவ்வித முரண்பாடுகளும் அற்ற வகையில் நடந்துகொள்ளவேண்டும்.
“தாக்குதல் நடத்தி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago