2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்கில் மருத்துவ பீடம் அமைக்க முஸ்தீபு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடு வருவதாக, கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்துடன் இணைந்ததாக மருத்துவ கற்கைநெறிகளை பயில்வதற்கு அம்பாறை பொது வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள், சுகாதார உயர் மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர், அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சென்று, மருத்துவ அபிவிருத்தி பீடத்தின் அபிவிருத்தி தொடர்பாக மீளாய்வு செய்தனர்.

குறித்த குழுவினர், தமது மீளாய்வு அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கனை அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸுடன் கலந்துரையாடியுள்ளனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக முன்மொழிவதாகவும், ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X