Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மே 02 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குபட்ட ஒலுவில் பிரதேசத்தில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களை, சிறுவர் நன்னடத்தை சீர்திருத்த பாடசாலையில் சேர்ப்பித்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக ஒலுவில் பிரதேசத்தில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் தோட்டங்களிலிருந்த நீர் இரைக்கும் இயந்திரங்கள் ஆகியன திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விஜயதுங்கவின் ஆலோசனைக்கமைய, விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்தன.
இந்நிலையில் சந்தேக நபர்களான மேற்படி இரு சிறுவர்கள், நேற்று (01) கைது செய்யப்பட்டனர்.
இச்சிறுவர்கள், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் ஊடாக சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன், கைப்பற்றப்பட்டுள்ள சைக்கிள்களை, அதன் உரிமையாளர்கள் அடையாளத்தை காண்பித்து, நீதிமன்றினூடாக பெற்றுக் கொள்ளலாமென அறிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள், போதைக்கு அடிமையானவர்களென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
40 minute ago
49 minute ago