Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
1990 ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 32ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு, சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று (06) நடைபெற்றது.
அகம் மனிதாபிமான வள நிலையமும், சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துரையப்பா காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், சமூக செயற்பாட்டாளர் த.பிரதீபன், சூழலியல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரி.கிருஷாந்த், அகம் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் திருமதி நவரட்ணம்அஞ்சலிதேவி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டார்கள்.
படுகொலை செய்யப்பட்ட 54 பேரின் திருவுருவப் படங்களுக்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தி, அக வணக்கம் செலுத்தப்பட்டது.
படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில், நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இரண்டு தாய்மார்களான அன்னம்மா, மாரிமுத்து மற்றும் கிராம தலைவர் சி.கார்த்திகேசு ஆகியோர் துயர் பகிர்ந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
38 minute ago
46 minute ago
48 minute ago