Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 மே 14 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கழிவுகளை உரிய முறையில் அகற்றாமையால் சூழல் மாசடைதல், டெங்கு மற்றும் தொற்று நோய்களுக்கு உள்ளாகுவதுடன், புற்றுநோய்கள் மற்றும் சுவாச நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன என, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி இன்று (14) தெரிவித்தார்.
அத்தோடு, கழிவுகளை விலங்குகளும் பறவைகளும் உட்கொள்வதால், பல பாதிப்புகளுக்கும் உட்பட்டு, அவை இறக்கும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“கழிவுச் செயற்பாட்டை ஒழுங்கமைப்பதன் மூலம், பசுமையான சூழலைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளிலான திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் பிரசார நடவடிக்கையும், அக்கரைப்பற்று மாநகர சபையால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர சபையின் ஆணையாளர், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர், பொலிஸ், இராணுவப் பிரிவினர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடன், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகர சபையின் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்துக் கழிவுகளும் பிரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால், அவற்றைக் கையாளுவதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. அத்துடன், மீள்சுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத நிலை தோன்றுகிறது.
“உரிய முறையில் கழிவுகளை அகற்றுவோமானால், சூழல் மாசடைதலிருந்து தடுத்துக் கொள்ளமுடிவதுடன், டெங்கு மற்றும் தொற்று நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.
“மேலும், சட்டரீதியான பிரச்சினையிலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம். கழிவுகளை கடதாசி, பிளாஸ்டிக், இலத்திரநியல் என்று பிரித்து மீள்சுழற்சிக்கு வழங்கி, வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago