2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

‘தற்கொலையை தவிர்ப்போம்’ மனவெழுச்சி பயிற்சி

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

“தற்கொலையை தவிர்ப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ், மனவெழுச்சி பயிற்சிப்பட்டறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இன்று (12)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரதி பணிப்பாளர் டொக்டர் எம்.பி. அப்துல் வாஜித் ஆரம்ப உரையை நிகழ்த்தியதுடன், பயிற்சிப்பட்டறையின் விரிவுரையை உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே. நௌபல் நடத்தினார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வை உளநலப்பிரிவு ஏற்பாடு செய்ததுடன், பணிப்பாளரின் வழிகாட்டலில் இவ்வாறான நிகழ்வுகள் உளநலப்பிரிவினால் சமூக மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X