Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பனங்காட்டுப்பால தடுப்புச் சுவரின் ஒரு பகுதி, கடந்த பல மாதங்களாக உடைந்த நிலையில், காணப்படுகின்ற போதும் அதனை திருத்துவதற்கான பணிகள், இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் இப்பாலத்தின் நடைபாதை ஊடாகப் பயணிக்கும் மக்கள் பீதியுடன் பயணிப்பதாகவும் வாகன சாரதிகளும் அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இப்பாலத்தின் ஊடாகப் பயணித்த காரொன்று, குறித்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதால், தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டது.
இவ்விபத்தில், கார் சிறிய சேதத்துக்குள்ளான நிலையில், உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இதேவேளை, உடைக்கப்பட்ட பால தடுப்புச் சுவரின் சேதத்துக்கான நிதி, குறித்த வாகனத்தின் உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு, பாலம் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்நடவடிக்கை இதுவரையில் ஏன் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் கேள்வியொழுப்புகின்றனர்.
ஆகவே, உரிய அதிகாரிகள் விரைவில் இதற்கான தீர்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago