Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2018 ஜனவரி 01 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூவின மக்களையும் அரவணைத்து, நல்லாட்சியை வழி நடத்துகின்றார். இதனால் இன்று மூவின மக்களும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர்” என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி இணை அமைப்பாளரும் கல்முனை மாநகர சபையில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் கைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.
பெரியநீலாவணையில் நேற்று (31) நடைபெற்ற கூட்டத்தில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி போதே, வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கின்ற இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மிக முக்கிமான தேர்தலாகும்.
“இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு மட்டுமல்ல வேட்பாளர்களுக்கும் மிக முக்கியமான தேர்தலுமாகும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுகின்றவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அந்தந்தப் பிரதேசம் மழுமையான அவிருத்தியை அடையும் என்பது உறுதியானதாகும்.
“தேர்தல் வந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் மருதமுனைக்குப் படையெடுக்கின்றார்கள். அபிவிருத்தியென்றால் மருதமுனையைப் புறக்கணிக்கின்றார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
“இந்தத் தேர்தலில் மருதமுனை மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். எந்த அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையில், மருதமுனை மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்திருக்கின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
6 hours ago