2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜன் காலமானார்

Princiya Dixci   / 2022 மார்ச் 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, பனங்காட்டைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இரத்தினம் நடராஜன், நேற்று (20) காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 64 ஆகும்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், 1980 முதல் வீரகேசரி பத்திரிகையில் பொத்துவில் நிருபராக கடமையாற்றினார்.

தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் பனங்காடு நிருபராக கடமையாற்றியதுடன், சுதந்திர ஊடகவியலாளராக தமிழ்மிரர், உதயன், வலம்புரி, தமிழ்தந்தி, மெட்ரோ, தினப்புயல் மற்றும் பிபிசி தமிழ் போன்ற ஊடகங்களில் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தை அமைப்பதில் இவர் பக்கபலமாக இருந்துள்ளார்.

நடராஜனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் சோகத்தில் ஊடவியலாளர்களாகிய நாமும் பங்கேற்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X