2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 11 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தைப் பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு வடிவமாக, மாபெரும் மனித சங்கிலிப் போராட்டமென்று, இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர்களுக்கான மாநாடும்  உள்ளூராட்சி மன்றத்தை நோக்கிய பயணத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம். அஸீம் தலைமையில், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள 'மக்கள் பணிமனை' இல் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கோட்டக் கல்வி முன்னாள் பணிப்பாளர் ஏ. பீர்முஹம்மட், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத், முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். தில்சாத் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இளைஞர்களும் பொதுமக்களும் கைகோர்த்து, சாய்ந்தமருது நகர மத்தியில் பாரிய மனிதசங்கிலிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .