Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (28) தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் மீண்டும் டெங்கு நுளம்பு பரவக் கூடியஅபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அண்மைக் காலமாக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கொழிப்பு செயலணி மற்றும் சமூக மட்டத் தலைவர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்துக்குள் அவற்றை துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கொழிப்பு செயலணியினால் கடந்த 24 திகதி தொடக்கம் எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி வரை தேசிய டெங்கொழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
29 minute ago
2 hours ago