Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 மார்ச் 07 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்றில் தமிழர்கள் மீது தாக்குதல் ஏற்பட்டால் அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் தீக்குளிர்ப்பேன் என, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாரென வெளியான செய்திக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியான குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என, இன்று (07) அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தான் தீக்ககுளிக்கப் போவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாக பேஸ்புக் பக்கமொன்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், இச்செய்தி, எனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்திம் அதேவேளை, எனது சிறப்புறுமையும் மீறப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த செய்தி தொடர்பாக ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாட்டில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இன முறன்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான இவ்வாறான செய்திகளை வெளியிடுவது என்பது சமூக பொறுப்பற்ற செயலாகும்.
“அதனை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்வாறான உண்மைக்கு புறப்பான செய்திகளை சம்மந்தப்பட்ட குறிந்த பேஸ்புக் பக்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025