2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சத்திர சிகிச்சைக்கூடம் திறந்து வைப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிறு சத்திரசிகிச்சைக் கூடம் மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் கலந்துகொண்டு, சத்திரசிகிச்சைக் கூடத்தை திறந்து வைத்தார்.

கெளரவ அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி  எம்.சி. எம். மாஹீர், விசேட அதீதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருதுதிக்குழு செயலாளர், வைத்தியர்கள், தாதிய பரிபாலகர், நிருவாக உத்தியோகத்தர், தாதியர்கள் மற்றும் ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

திறந்து வைத்த வெள்ளிக்கிழமை அன்று 6  சிறு சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X