Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Freelancer / 2023 மே 03 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப் பத்திரமற்ற சட்டவிரோத பியர்கள் மற்றும் மதுபான போத்தல்களை ஓட்டோவில் கொண்டு சென்ற நபர், நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபானங்கள், வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுவதாக, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான டீ.எம்.எஸ்.கே தசநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவு்ககு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து நேற்று வீதி ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்போது ஓட்டோவில் சுமார் 38 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க இரு சந்தேகநபர்கள், 175 க்கும் அதிகமான மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ஒரு தொகுதி ஆகியனவற்றை சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் 2 சந்தேக நபர்களை கைது செய்ததுடன், ஓட்டோ மற்றும் மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை எனவும் அளவுக்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பதுக்கி கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago