2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை - பெரியநீலாவணை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புதன்கிழமை (19) மாலை  சந்தேகநபர் கைதானார்.

பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டி.துஷார திலங்க ஜெயலால் வழிகாட்டலுக்கு அமைய பெருங் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமான  டி. தினேஷ்  தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்துக்கு இடமான நபரை கைது செய்தனர்.

இதன்போது சந்தேக நபர் வசம் இருந்து  860 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவ்வாறு  கைது செய்யப்பட்ட 35 வயதுடைய  சந்தேக நபரை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X