2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கேணி அமைக்க மக்கள் தீர்மானம்

Princiya Dixci   / 2022 மார்ச் 13 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

அட்டாளைச்சேனைப் பிரிவிலுள்ள திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தில் சர்ச்சைக்குரிய மண் நிரப்பு விவகாரத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்த பொதுமக்கள், அந்தஇடத்தை மீண்டும் தோண்டி, தீர்த்தக்கேணி அமைக்கவேண்டுமென தீர்மானம் எடுத்துள்ளனர்.

அத்தீர்மானத்தை எழுத்து வடிவில் 3 நாள் காலஅவகாசம் கேட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் கையளித்துள்ளனர்.

அக்காணியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கும் அருகிலுள்ள சலவைத் தொழிலாளர் கட்டடத்தை புனரமைத்துத்தரவுமே அக்காணியை மண்போட்டு நிரப்பியதாக அட்டாளைச்சேனை தவிசாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு மக்கள் இணங்கவில்லை. மாறாக திராய்க்கேணியின் இருப்புக்கு காரணமாயமைந்த கேணியை மீண்டும் தோண்டி, தீர்த்தக்கேணி அமைக்க இணக்கம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X